ஏழாம் வகுப்பு படித்த போலி மருத்துவர்!
என்னுடன் சேகரன் என்பவன் படித்துவந்தான். ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்தான். படிப்பு சரியாக வராததால் அத்தோடு நிறுத்திக்கொண்டான். பின்னர் கிராமத்தில் இவன் சிலகாலம் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். இப்போது மாட்டுவண்டிகள் மறைந்து போனாலும் அப்போது(சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு) எங்கள் கிராமத்தில் மாட்டுவண்டிகள் இருந்தன. சில வருடங்கள் கழித்து அவனது மாமா ஒருவர் எங்கோ கம்போன்டராக இருக்கிறார் அவரிடம் போகிறேன் என்று சொன்னான். சொன்ன மாதிரி போய்விட்டான். இதன் பின்னர் நான் நிறைய வருடங்களாக இவனை பார்க்கமுடியவில்லை.
ஒரு முறை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த போது நானும் ஒரு நண்பனுமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இவன் சாலையின் எதிர் பக்கத்தில் மிடுக்காக உடை அணிந்தது கொண்டு பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கிறான். நண்பனிடம் அவனைப்பற்றி விசாரித்தபோது சொன்னான். அவன் இப்ப டாக்டர்! தெரியாதா உனக்கு? என்றான். என்னப்பா! இவன் ஏழுவரைதானே படித்தான் என்றேன். டாக்டருக்கு எம்.பி.பி.எஸ் எதுக்கு! ஏழாம் கிளாஸ் படிச்சாலே போதும்டா! என்றான்.
நிஜமாகவே இவன் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் சாலையிலுள்ள காரவிளை என்னும் ஊரில் ஒரு கிளினிக் வைத்திருந்திருக்கிறான். இதை கேள்வி பட்டதுமே நான் அதிர்ச்சி அடைந்தேன். இதை போல இன்னும் எத்தனை போலி டாக்டர்களோ தமிழகம் முழுவதும்.
2 கருத்துகள் :
DO COMPLAINT. SAVE THE PEOPLE.
யூர்கன் க்ருகியர்..... said...
DO COMPLAINT. SAVE THE PEOPLE.
//இது சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு. அதன் பின்னர் நான் அவனை பார்த்ததே இல்லை. இப்போது இப்படி நடந்தால், நான் நிட்ச்சயமாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன்//
கருத்துரையிடுக