பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
திங்கள், 2 பிப்ரவரி, 2009
லண்டன் மாநகரம் நேற்றும் இன்றும்
(மேலேயுள்ள இரண்டு படங்களும் என் வீட்டின் பின்பக்க தோட்டத்தில் எடுத்தது).
(பனியோடு விளையாடும் என் பிள்ளைகள்).
(ஜன்னல் ஓரமாக வைக்கப்பட்டுள்ள செடி பனியை தாங்கி நிற்கிறது).
லண்டன் மாநகரம் நேற்றும் இன்றும் பயங்கர பனி பொழிவால் இயல்பு வாழ்கையை இழந்து நிற்கிறது. நான் சுமார் மூன்று வருடங்களாக லண்டனில் இருக்கிறேன். இங்கு பிச்சிப்பூ மாதிரி பனி விழுந்து கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல இருந்தாலும் நேற்று மதியம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு இன்றும் இரவுவரை தொடர்கிறது.
சாலைகளில் சுமார் இரண்டடிக்கு மேல் பனியால் சூழப்பட்டதால் லண்டன் மாநகரின் மொத்த போக்குவரத்துமே நிறுத்தப்பட்டது. இதற்க்கு முன்னர் 1991 பெப்ருவரி மாதத்தில் இதைப்போல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாம்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலுமே பிள்ளைகளை சமாளிப்பதென்பது பெரும்பாடு அதில் நேற்றும் இன்றும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை வேறு. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல வேண்டியவர்களுக்கு போகமுடியாத சூழ்நிலை. வேலையில் இருந்தவர்களுக்கு வீட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை. ஆக மொத்தம் லண்டன் மாநகரம் இரண்டு நாட்களாக முடங்கி போனது.
(என் வீட்டின் முன்புறமுள்ள கார் ஷோரூமில் உள்ள கார் எல்லாம் பணியால் மூடியுள்ளது).
பின்குறிப்பு: சீனா கமெராவில் தியதியை சரியாக்க முடியவில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக