முதல் இந்திய பெண் புனிதர் |
புனித அல்போன்சா |
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற குக்கிராமத்தில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி ஜோசப்-மேரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் சிஸ்டர் அல்போன்சா. அவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இளம்வயதிலேயே தாயை இழந்தார்.
பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார். அவருக்கு 13 வயது இருக்கும்போது உமி எரிந்துகொண்டிருந்த குழிக்குள் கால் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் கருகி ஊனமானார்.
மரணம் அடைந்தார்
பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஏசுவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1936-ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆகி ஆசிரியராக பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியர் பணியை அவரால் தொடர முடியவில்லை.
இந்த நிலையில், கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் சிஸ்டர் அல்போன்சா மரணம் அடைந்தார்.
அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கல்லறையில் நடக்கும் புதுமைகள்
சிஸ்டர் அல்போன்சா அனுபவத்தை துன்பங்களை கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரது கல்லறைக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். அப்படி கல்லறைக்குச் சென்று வேண்டும்போது அவர்கள் கேட்டவை நடக்க ஆரம்பித்தன. அவரது பெயரால் ஆங்காங்கே புதுமைகளும் நடந்தன. அல்போன்சாவின் கல்லறைக்கு சென்று வேண்டியதால் தீராத நோய்கள் குணமானது என்றும், கேட்ட வரங்கள் நடக்கின்றன என்றும் ஏராளமானோர் சாட்சி கூறினர்.
இதனால், சிஸ்டர் அல்போன்சாவின் புகழ் உலகம் எங்கும் பரவ தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனுக்கும் தகவல் போனது. இதைத்தொடர்ந்து, அல்போன்சா பெயரால் புதுமைகள் நடப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும் வகையில் இறையியல் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கேரளா சென்று கல்லறையை பார்த்து வந்ததுடன் பயனடைந்த மக்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. பின்னர், மக்கள் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று அந்த குழு போப் ஆண்டவருக்கு அறிக்கை சமர்பித்தது.
அருளாளர் பட்டம்
இதைத்தொடர்ந்து, சிஸ்டர் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்க திருச்சபை கூடி முடிவு செய்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.
அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் கடந்த ஆண்டு அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ஆம் தியதி 2008ஆம் வருடம் அருளாளர் அல்போன்சாவிர்க்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
புனிதர் பட்டதிருப்பலியில் குருப்பன்தாராவின் 11 வயது ஜினில் ஷாஜியும் அவனது தந்தை ஷாஜியும் கலந்து கொண்டனர்.
ஜினில், கோணலான கால்களுடன் பிறந்தவன். எனினும் அருட்சகோதரி அல்போன்சாவின் சமாதியில் செபித்ததன் பலனாக அவனின் கால்கள் குணமடைந்து நேராகின. இப்புதுமை 1999ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்புதுமை, அருளாளர் அல்போன்சா புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குடமலூரில் அல்போன்சாவின் வீடு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டுள்ளது.
கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது.
புனிதர் பட்டதிருப்பலியில் குருப்பன்தாராவின் 11 வயது ஜினில் ஷாஜியும் அவனது தந்தை ஷாஜியும் கலந்து கொண்டனர்.
குடமலூரில் அல்போன்சாவின் வீடு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டுள்ளது.
கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது.
Stamp
புனித அல்போன்சாவை கௌரவிக்கும் படியாக இந்தியஅரசு 19 ஜூலை 1996ஆம் வருடம் அவருடைய தபால் தலையை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
0 கருத்துகள் :
கருத்துரையிடுக