.

Loading...

வெள்ளி, 23 ஜனவரி, 2009

வேத சாட்சி தேவசகாயம் பிள்ளை

வேத சாட்சி தேவசகாயம் பிள்ளை,

தேவசகாயம் பிள்ளை

வேத சாட்சி தேவசகாயம் பிள்ளை,


இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712 இல், நாயர் குலத்தில் பிறந்தவர்தான் இந்த நீலகண்ட பிள்ளை. சிறுவயதிலேயே சமஸ்கிருதம், கலை முதலியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன் படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.


அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் பத்மநாபபுரம் கோட்டையில்Padmanabhapuram Palace, Kerala, India by smee_me. பணியில் அமர்த்தப்பட்டார் . இந்த வேளையில் இவருக்கும் மேக்கோட்டை சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டட்ச் படைகள் மார்தண்டவர்மாவின் படைகளால் முறியடிக்கப்பட்டனர். அதன் படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெநேடிச்டுஸ் தே லன்னாய், அவருடைய படைகளுடன் சிறைபிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இப்போதும் இருக்கிறது.

நாளடைவில் இந்த தே லன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரிக்கிறார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் .

Go to fullsize image

அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறிஸ்தவத்தை அவருக்கு அறிமுக படுத்துகிறார், நாளடைவில் கிறிஸ்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக ஆசை படுகிறார். உடனே இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையின் (கிஒவனி பப்டிச்ட பட்டறி) மூலம் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறுகிறார். அதுமுதல் அவர் தேவசகாயம் பிள்ளை என அறியபடுகிறார் .



கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் பலரிடமும் இயேசு கிறிஸ்துவை பற்றிp போதிக்கிறார், பலரை கிறிஸ்தவராக மாற்றுகிறார். தன் மனைவி ஞானப்பூ எனும் புது பெயருடன் ஞானஸ்தானம் பெற்று கொள்கிறார். .


இதனால் இந்து பாரம்பரிய குடும்பத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறார் . எனவே இவருக்கெதிராக பல பொய் குத்தசாட்டுக்கள் சுமர்தப்படுகின்டன, இந்த கால கட்டத்தில் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மாறும்படி நிர்பந்திக்கிறார்கள், இல்லை எனில் மரணதண்டனை என அறிவுறுத்தப்படுகிறார். தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்த அவர் அதை Vw;Wகொள்ளவில்லை,


இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைf;கிறார் . அவருடைய cடம்பில் கரும் புள்ளியும் செம் புள்ளியும் குத்தி பின்புறமாக கைகள் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அனுவிக்கபட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மw;wவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை Cர்Chக அழைத்து சென்றார்கள் .


அற்புதங்கள்:


தேவசகாயம் பிள்ளையை தக்கலையை அடுத்த புypAற்குwpச்சி என்னும் இடத்திற்கு கொண்டு வந்தபோது அவர் மிகுந்த தhfkhயிருந்ததhல் அங்குள்ள பாறையில் முழங்கால் பதிக்கவே அதிலிருந்து தண்ணீர் வந்து அவர் தாகத்தை தzpj;ததாம்.


இப்போதும் இந்த தண்ணீர் அதே இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது தக்கலை மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இதன் பின்னர் நகர்கோயிypd; பக்கத்தில் உள்ள பெருவிis என்னுமிடத்தில் பட்ட ஒரு வேப்பமரத்தில் ஏழு மாதங்களாக கட்டி வைத்து சித்திரவதை செய்கின்டனர். இதற்கிடையில் இவரை கட்டிவைத்திருந்த வேப்பமரம் திளுர்த்து இலைவிட ஆரம்பித்து விட்டது. இங்கே இவரை பார்க்க அதிகம் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது.



இதன்பின்னர் மரணதண்டனை நிறைவேw;wகூடிய இடமான ஆரல்வhய்மொழிf;கு இவரை அழைத்து செல்கின்டனர். இது இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் அருகில் உள்ளது. அன்றைய மதுரை ராஜ்யத்திற்கும் திருவிதன்கோர் ராஜ்யத்திற்கும் எல்லை பகுதியாகும்.

இந்த நாl;களில் தேவசகாயம் பிள்ளை அதிக செபj;திலும் நோன்பிலும் தன்னை பார்க்க வருபவர்களுக்கு செபம்களை போதித்தும் வந்தார் . தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குUவிடமிருந்து நற்கருணை பெw;Wகொz;டார் .


தேவசகாயம் பிள்ளையின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியதால் அவரை பார்க்க அதிக மக்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் ராஜாவின் ஆட்கள் சீக்கிரமாக இவரை கொd;Wபோட தீர்மானித்தனர்.

கடைசியாக அவரை தண்டனை நிறைவேற்றும் இடமான கhத்தாடிமலை என்னுமிடத்திற்கு கொண்டுசெல்கிd;wனர்.


அங்கு அவர் முழந்தாள் படியிட்டு செபிக்கிறார்
. அத்தடமானது பாறையில் பதிகிறது. இப்போதும் அத்தடத்தை அப்பாறையில் காணலாம்.



பின்னர் ஐந்து முறை அவரை சுட்டும் சாகவில்லை. இதைகண்ட தேவசகாயம் பிள்ளை துப்பாக்கியை வாங்கி அதை ஆசிர்வதித்து இனி சுடுங்கள் நான் சாவேன் என கூறியுள்ளார் . அதன் பின்னரே அவர் சுட்டு கொல்லப்பட்டார்


தேவசகாயம் பிள்ளை இறந்ததும் அந்த பாறையானது வெடித்து சிதறி தேவாலய மணிபோல ஓசை எழுப்பியதாம். இன்றும் இந்த பாறை உள்ளது,



அதில் நாம் கல்லால் அடித்தhல் அது மணியோசை எழுப்பும். எனவே இது இப்போது மணியடிச்சான் பாறை என அழைகப்படுகிறது.

தேவசகாயம் பிள்ளையின் cடல் நாகர்கோயிலில் cள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!