பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
திங்கள், 5 மே, 2014
லண்டன் விசா? உஷார்!
லண்டன் விசா? உஷார்!
சென்ற வாரம் நண்பன் ஒருவரின் மகனுக்கு லண்டனில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசா கிடைக்க போவதாகவும் அதற்கு ஏற்கனவே பணம் கட்டி விட்டதாகவும், விரைவில் இங்கு லண்டன் வரவிருக்கிறான் எனவும் எனக்கு தகவல் வந்தது. அவன் ஹோட்டலின் பெயரையும் விலாசத்தையும் சொன்னதுமே எனக்கு புரிந்து விட்டது இது மோசடியென. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஒரு லேன்ட்லைன் போன் கிடையாது, வெறும் மொபைல் எண். அவன் சொன்ன இடத்தில் அந்த பெயரில் நட்சத்திர ஹோட்டலே கிடையாது. ஆனால் இந்த மோசடி பேர்வழிகள் ஒரு போலி இணையதளத்தை வைத்து இதை ஏமாளிகளிடம் காண்பிக்கிறார்கள். இந்த லண்டனில் உள்ள போலி இணையதளத்தின் இந்திய பிரதியாக டெல்ஹியை சேர்ந்த பிரியங்கா(போலி பெயராக இருக்கலாம்) என்ற பெண் செயல்படுகிறார். இவர் தன்னை ACO குளோபல் நிறுவனத்தில் பணிபுரிபவராகவும் தன் பெயரிலே டிமான்ட் டிராப்ட் அனுப்பும்படியாகவும் கேட்டு பணம் பெற்றுள்ளார்.
(போலி இணையதளத்தின் படம்)
நியூ ரேவேலேசன் ஹோட்டல் என போலி பெயரில் இணையத்தை வைத்து விட்டு, இந்தியாவில் இருந்து செயல்படும் இந்த மோசடி பேர்வழிகளிடம் யாரும் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். இங்குள்ள சிம் கார்டை வைத்துகொண்டு இந்தியாவில் இருந்து செயல்படுகிறார்கள்! அவர்கள் சொல்லியிருக்கும் இடத்தில் ஒரு சாதாரன ஹோட்டல் மட்டுமே இருக்கிறது, அதுவும் வேறு பெயரில் வேறு தொலைபேசி எண்களுடன்.
தயவு செய்து யாரும் இந்த மோசடி பேர்வழிகளிடம் என் நண்பனை போல ஏமாந்து விடாதீர்கள். மோசடி பேர்வழிகள் பயன்படுத்தும் எண்கள்:
+44-7014212919, +44-7014212918
மோசடி பேர்வழிகள் பயன்படுத்தும் ஹோட்டலின் பெயர்:
New Revelation Five Star Hotel (www.newrevelationhotel.com)
இந்த சம்பவம் இங்கு லண்டனில் நடக்காததாலும் நான் பாதிக்கபடாததாலும் இங்குள்ள போலீசில் இதை தெரிவிக்க முடியாது. என் நண்பனை போல யாராவது இவர்களிடம் ஏமாந்திருந்தால் தயவு செய்து போலீஸ் மற்றும் சைபர் கிரைம்-ற்கு தெரிவியுங்கள். மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
5 கருத்துகள் :
Here is the details of the registrar's detail. Funny thing is that a UK hotel domain name is registered from India.
Registrant Name: varun singh
Registrant Organization:
Registrant Street: house no-80 sector-31
Registrant City: Haryana
Registrant State/Province:
Registrant Postal Code: 121001
Registrant Country: IN
//bbsnetting said...
Here is the details of the registrar's detail. Funny thing is that a UK hotel domain name is registered from India.
Registrant Name: varun singh
Registrant Organization:
Registrant Street: house no-80 sector-31
Registrant City: Haryana
Registrant State/Province:
Registrant Postal Code: 121001
Registrant Country: IN//
உங்கள் தகவலுக்கு நன்றி! இதில் கொடுமை என்னவென்றால் பணம் கொடுத்து ஏமாந்தவன் ஒரு கணிப்பொறியாளர்!!
சார் எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் ஏமாந்துள்ளார் ஹோட்டல் பெயர் Hilton லண்டன் இப்பொழுது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருக்கிறார் காவல்துறையிடம் சென்றதற்க்கு அவர்கள் இது நைஜிரிய கும்பலின் வேலை எதுவும் செய்ய முடியாது என கைய விரித்து விட்டனர்
//தமிழ்க்குமரன் said...
சார் எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் ஏமாந்துள்ளார் ஹோட்டல் பெயர் Hilton லண்டன் இப்பொழுது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருக்கிறார் காவல்துறையிடம் சென்றதற்க்கு அவர்கள் இது நைஜிரிய கும்பலின் வேலை எதுவும் செய்ய முடியாது என கைய விரித்து விட்டனர்//
வருகைக்கு நன்றி குமரன், நண்பரை சைபர் க்ரைமை தொடர்பு கொள்ள சொல்லுங்கள், மேலும் போலீஸ் எதுவும் செய்ய முடியாது என சொல்ல முடியாது.
நன்றி
கருத்துரையிடுக