பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
விபத்துக்குள்ளான இத்தாலி கப்பலில் தமிழர்!
சென்ற வாரம் இத்தாலியில் 4200 பேருடன் சென்ற ஐம்பது லட்சம் அமரிக்க டாலர் விலையுள்ள ஐந்து வருடமேயான மிகவும் நவீன கப்பல் "தீவிற்கு மிக அருகில் சென்று, அங்குள்ள மக்களுக்கு கையசைத்து செல்லவேண்டுமென்ற கப்பலோட்டியின் விபரீத ஆசையால்" தறைதட்டி விபத்துக்குள்ளானதில் ஒரு தமிழரும் இருந்துள்ளார். இவர் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தட்டான் விளையை சேர்ந்த சுவாமிநாடார் மகன் சந்தோஸ் குமார் ஆவார்! இவர் விபத்திலிருந்து தப்பி நேற்று தனது சொந்த ஊர் வந்து சேர்ந்தார். இவரை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்!
இக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 13. இன்னும் இருபது பேரை காணவில்லை. மீட்புப்பணியினர் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். திரு சந்தோஸ் குமார் ஐந்து வருடங்களாக இக்கப்பலில் பணிபுரிந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சென்று நலம் விசாரித்து வருகின்ற
னர்.
படங்கள்: மணவை மலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
2 கருத்துகள் :
உயிர் தப்பி வந்ததிற்குப் பாராட்டுக்கள்.
பழனி.கந்தசாமி said...
உயிர் தப்பி வந்ததிற்குப் பாராட்டுக்கள்.
22 January 2012 16:12
//உங்கள் கருத்திற்கு நன்றி ஐயா!//
கருத்துரையிடுக