.

Loading...

புதன், 22 ஜூன், 2011

நன்றி கெட்ட நாயே! (உங்களை சொல்லவில்லை)

நன்றி கெட்ட நாயே!

மனிதர்கள் சில நேரங்களில் நன்றி கெட்டவர்களாக மாறினால், இப்படி "நன்றி கெட்ட நாயே!" என திட்டுவதை கேட்டிருப்போம். உண்மையிலேயே நாய் நன்றி கெட்டதா?

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது கேள்விபட்ட ஒரு உண்மை சம்பவம். நடந்த நாடு மற்றும் சம்பந்தபட்டவர்களின் பெயர் எல்லாம் எனக்கு மறந்து விட்டது. சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.


ஒரு பெரிய செல்வந்தருக்கு ஒரு செல்ல நாய் இருந்ததாம். இது யார் இவரை தேடி வந்தாலும் குரைக்குமாம். அந்த எச்சரிக்கையையும் மீறி உள்ளே சென்றால் கடித்து விடுமாம். இதனால் அந்த செல்வந்த்தரின் நண்பர்கள் எல்லோருமே இவரிடம் குறைபட்டுக் கொண்டார்களாம். இதை கேட்ட செல்வந்தருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியதாம். தான் மாறு வேடத்தில் வந்தால் என்னவாகுமென!

இதன்படி வெளியே சென்ற அந்த செல்வந்த்தர், மாறு வேடத்தில் வீட்டிற்கு வந்த்துள்ளார்.(கூடவே நாய் கடித்துவிட்டால் முதலுதவிக்கான ஏற்பாட்டுடன்) நாய் வேறு யாரோ என நினைத்து குரைத்துள்ளது. இவர் அதையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார். அவ்வளவுதான், நாய் அவரை கடித்துள்ளது. சுதாகரித்துக்கொண்ட அவர், அந்த நாயின் முன்னே தன் மாறு வேஷத்தை கலைத்துள்ளார். இதை கண்ட நாய் உடனே கீழே விழுந்த்ததாம். அவசரமாக நாயை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றிருக்கிறார் அந்த செல்வந்தர். அதை பரிசோதித்து பார்த்த மருத்துவர், நாய் அதன் இதயம் வெடித்து இறந்த்துள்ளதாக சொன்னாராம்.

பாருங்கள், எவ்வளவு நன்றியுள்ளதென! எனவே, "நன்றி கெட்ட நாயே" என சொல்லலாமா? நாயை நன்றிக்கு இலக்கணமாகத்தானே சொல்லவேண்டும்.

8 கருத்துகள் :

pradeep சொன்னது…

story nalla than irruku , nambamudejala maruvedam potathala muthalalija therejama irrukalam ... mopa sakathi enga pochu .ipadejay kathakala solijey palakitanga munorkal.

கூடல் பாலா சொன்னது…

நாய் நன்றியுள்ளதுதான் .....ஆனால் நாயின் உரிமையாளரும் நன்றி உடையவராக இருந்தால் அது நண்பர்களை கடிக்காது ......சுவையான சம்பவம்தான் .

தமிழ் செல்வன் இரா சொன்னது…

Its.. true

Selvaraj சொன்னது…

pradeep said...
story nalla than irruku , nambamudejala maruvedam potathala muthalalija therejama irrukalam ... mopa sakathi enga pochu .ipadejay kathakala solijey palakitanga munorkal.

//கருத்திற்கு நன்றி நண்பரே, உண்மை சம்பவம் என்றுதான் கேள்விபட்டேன்//

Selvaraj சொன்னது…

koodal bala said...
நாய் நன்றியுள்ளதுதான் .....ஆனால் நாயின் உரிமையாளரும் நன்றி உடையவராக இருந்தால் அது நண்பர்களை கடிக்காது ......சுவையான சம்பவம்தான்

//கருத்திற்கு நன்றி பாலா!//

Selvaraj சொன்னது…

தமிழ் செல்வன் said...
Its.. true

//கருத்திற்கு நன்றி தமிழ் செல்வன்,
உண்மையென்றுதான் கேள்விப்பட்டேன்//

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நன்றிக்கு இலக்கணமான பகிர்வு.

Selvaraj சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
நன்றிக்கு இலக்கணமான பகிர்வு.

//உங்கள் கருத்திற்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!