.

Loading...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வெள்ளை தோலில் கறுப்பு கலாச்சாரம்!

வெள்ளை தோலில் கறுப்பு கலாச்சாரம்!

கார் + கார் = காமம்:

லண்டனில் இப்போதுதான் குளிர் முடிந்து வெயில் தலை காட்ட தொடங்கியிருக்கிறது. இருபது டிகிரி வெயில் என்றாலே கோடை என சொல்லி, உடைகளுக்கு விடை கொடுத்து விடுவார்கள்! ஏற்கனவே பிள்ளைகளுக்கும் விடுமுறை. சரி பார்க்கிற்கு போகலாம் என முடிவு பண்ணி, போகும் போதுதான் இந்த "கார் + கார் = காமம்" என்னும் பார்முலாவை கண்டுபிடித்தது.

வீட்டிற்கு பக்கத்திலேயே பார்க்கிருந்த்தாலும் பிள்ளைகளுக்கு என்னவோ கொஞ்சம் தூரத்திலுள்ள பார்க்கிற்கு செல்வதற்குத்தான் விருப்பம். சரி, போகலாமென முடிவு பண்ணி கிளம்பிவிட்டோம். பார்க்கை நெருங்கும் போது என் காரின் முன்னே, ஒரு மினி கூப்பர் கார் போய்கொண்டிருந்தது. அதில் ஒரு வெள்ளைக்காரன் மட்டும்தான் இருந்தான். இதற்குள் பார்க்கை அடைந்து விட்டோம். அவன் காரை நிறுத்தத்தில் கொண்டு விடவும், ஏற்கனவே அவனின் காரின் அடுத்த நிறுத்தத்தில் அதேபோலவே ஒரு மினி கூப்பர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒரு வெள்ளைக்காரி வந்தாள். நான் என் காரை அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினேன். இதற்குள்ளாக அவர்கள் இருவரின் காரும் ஒரேமாதிரியா இருந்ததால் பேசிக்கொண்டார்கள். இது இயற்கைதானே என நினைக்கவும், இருவரும் முத்தத்தில் இறங்கி விட்டார்கள்! இங்கு பொது இடத்தில் இப்படி கட்டி புடிச்சி முத்தம் கொடுப்பது சகஜம். யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்!


இதற்குள் நாங்கள் பார்கிற்குள் நுழைய ஆரம்பித்து விட்டோம். அப்போது ஓடி வந்த ஒரு வெள்ளைக்காரி, முத்தமழை பொழிந்துகொண்டிருந்த பெண்ணை பாளார் என அறையவும், அவள் தடுமாறி விழுந்துவிட்டாள். நீ எப்படி அவளை அடிப்பா? என கேட்டு மீண்டும் முத்தத்தை தொடர்ந்தனர்.

அடி கொடுத்தவளின் கணவன்தான் முத்தம் கொடுத்துகொண்டிருந்தது. அடுத்த நிமிடமே வேறு ஒரு வெள்ளைக்காரன் ஓடி வந்து முத்தம் கொடுத்து கொண்டிருந்த ஆணை பாளார் என அடித்தான்! பின்ன, பொண்டாட்டியை வேறு ஒருவன் முத்துவதை எவன்தான் அனுமதிப்பான். ஆக மொத்தம் பார்க்கில் களோபரம்.

இதற்குள் ஒரு சிறு கூட்டம் கூடி விட்டது. இரண்டாவது வந்த வெள்ளைக்காரன் சொன்னான், இவன் என் பொண்டாடியை முத்தம் கொடுத்ததால், நான் இவனின் பொண்டாடியை முத்தம் கொடுக்க வேண்டுமென! நானும் இதற்கு அவனின் பொண்டாட்டி சம்மதிக்க மாட்டாள் என நினைத்தேன். அவளோ சரியென சொல்லிவிட்டாள். கொஞ்சம்கூட தாமதிக்காமல் இவன் பொண்டாடியை அவனும், அவன் பொண்டாட்டியை இவனும்.... என்ன கொடுமை! இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் திருதிருவென முழித்துக்கொண்டு....பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த தன் குடும்பத்தினரை எடுக்க வந்த இடத்தில்தான் இந்த பிரச்சினை.

இவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை தோலாக இருந்தாலும், கலாச்சாரம் என்னவோ கறுப்புத்தான்!
நாம் பார்பதற்கு கறுப்பு தோலாக இருந்தாலும், நம் கலாச்சாரம் என்னவோ வெள்ளைதான்!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!