.

Loading...

வெள்ளி, 8 அக்டோபர், 2010

சவுதி இளவரசருக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?

சவுதி இளவரசருக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?

சவுதி அரேபியா, ஈரான், ஏமன், சூடான், நைஜீரியா, ஐக்கிய அரபு குடியரசுகள், மௌரித்தானியா ஆகிய ஏழு நாடுகளும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் நாடுகள். அதிலும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை என்பது வெள்ளிக்கிழமை பள்ளியில் தொழுகை முடிந்த பின்னர், பொது மக்களின் முன்னிலையில் தலையை வெட்டிக் கொல்வது. இப்போது சவுதி இளவரசர் சவுது பின் அப்துல்அஜிஸ் பின் நசிர் அல் சவுது இந்த மரண தண்டனைக்குரிய குற்றங்கள் இரண்டினை செய்துள்ளார். ஓரின சேர்க்கை, கொலை. எனவே இவருக்கு சவுதி அரேபியா சட்டப்படி இரண்டு மரண தண்டனைகள் வழங்க வேண்டும். இது நடக்குமா என தெரிய வில்லை?


(கொலை நடந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்)

இந்த கொலை செய்வதெல்லாம் இளவரசர்களுக்கு ஒன்றும் பெரிதல்ல! இதே கொலை சவுதி அரேபியாவில் நடந்திருந்தால் இந்த கறுப்பு அரபியான பந்தர் அப்துல் அஜிசின் உடலே காணாமல் போயிருக்கும். நல்ல வேளை இது லண்டனில் நடந்ததால் இன்று ஊடகங்களில் வெளியாகி விட்டது.


(கொலை செய்யும் இளவரசர்)

முன்பு ஒருமுறை ரியாத்திலுள்ள ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் எல்லோரும் வரிசையில் நின்று பொருட்களுக்கான பணத்தை செலுத்திக்கொண்டிருக்கும் போது, வரிசையில் நிற்காமல் ஒருவன் முன் சென்றதும் அவனிடம் ஒரு பிலிப்பின்ஸ் நாட்டை சேர்த்தவன் எல்லோரைப்போல வரிசையில் நில் என சொன்னதுதான் தாமசம். அந்த அரபி உடனே தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த பிலிப்பின்ஸ் நாட்டுக்கரனை சுட்டுக் கொன்றுவிட்டான். பின்னர் வெளியே சென்று காரிலிருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து செத்தவன் மேல் போட்டுவிட்டு போய் விட்டான். பின்னர் தான் தெரிந்த்தது அவன் ஒரு இழவு அரசன் என்று. இந்த செய்திகள் எல்லாம் அங்கு வெளியே வருவது கிடையாது. இந்த இழவு அரசர்கள் தலையில் ஏதாவது கிரீடம் வைத்து கொண்டு நடந்தாலாவது பாவங்கள் ஒதுங்கி கொள்வார்கள். இந்த இழவுஅரசனின் போதாத காலம் இது லண்டனில் நடந்தது தான்.

இங்கிலாந்திலோ இவனுக்கு மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். ஒரு வேளை அதிக பட்சமாக எட்டு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கலாம். அப்படி இல்லையெனில் தண்டனை இல்லாமல் தப்பித்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.


(கொலையுண்ட பந்தர் அப்துல்அஜிஸ்)

காரணம் டோனி பிளையர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போது ரியாத்தில் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கபட்டிருந்த ஒரு இங்கிலாந்து பெண்ணை டோனி பிளையர் தன்னுடன் அழைத்து கொண்டு வந்துவிட்டார். ஆகவே அதை போல இந்த இளவரசரும் தப்பித்து விடலாம். யார் கண்டது. இளவரசி டயானாவின் கொலையாளியையே இன்னும் பிடிக்க வில்லையே!

வீடியோவை காண இங்கே சொடுக்கவும்.

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!