.

Loading...

திங்கள், 20 செப்டம்பர், 2010

சலுகை திருடர்கள்!

சலுகை திருடர்கள்!

இங்கிலாந்தில் இது ஒரு பெரிய பிரச்சனை. அரசின் சலுகைகளை தவறான தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்வது. இப்படி செய்வது வெள்ளைக்காரர்கள் மட்டுமல்ல! இங்கு வந்து குடியேறியுள்ள வெளிநாட்டவரும்தான். சென்ற வருடம் மட்டும் 900 மில்லியன் பவுண்டுகள் இப்படி சலுகை திருடர்களால் அரசிற்கு இழப்பாகியுள்ளது.(ஒரு பவுண்டு சுமார் எழுபது இந்திய ரூபாய்கள்) இப்படி ஏமாற்றுபவர்களை ஒரு புறம் பிடித்துக்கொண்டிருந்த்தாலும் மறுபுறம் இது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.

சமீபத்தில் இப்படி பிடிபட்ட ஒருவர் கால்பந்தாட்டத்தின் நடுவராக செயல் பட்டுக்கொண்டிருந்தார். இவர் இந்த விளையாட்டின் நடுவராக ஓடி செயல் படுவதை வீடியோ மூலம் எடுத்திருந்தனர். காரணம் இவர், கால் ஊனம் நடக்க முடியாதென, அரசின் சலுகையை பெற்று வந்தவர். இன்னும் பலர், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு அந்த சூடோடு குழைந்தையும் பெற்றுக்கொண்டு, அதே வேகத்தில் விவாக ரத்தும் செய்து கொள்வர். பின்னர் வாழ வழியில்லை, இருக்க வீடில்லை, என சொல்லி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டையும், பிற சலுகைகளையும் பெற்றுக்கொள்வர். இதன் பின்னர் இவர்கள் இணைந்து விட்டால், அதை அரசிற்கு சொல்ல மாட்டார்கள்! சில வேளைகளில் புதிய ஆணுடன் சேர்ந்து வாழ்வார்கள். இதை நிறையபேர் அரசிடம் சொல்லாமலே சலுகை திருடர்களாகவே வாழ்ந்து வருவர்.

சென்ற வருடம் மட்டும் இந்த சலுகை திருடர்களில் 56,493 பேர் பிடிபட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 232 பேர். இப்படி சலுகையை திருடுகிறவர்களை பிடிக்க நிறைய வழி முறைகளை கையாள்கிறது அரசு. பிடிபடுபவர்களிடம் கொடுத்த பணத்தை சரியாக வசூல் செய்துவிடுவர். கூடவே தண்டனையும்.

இந்தியாவிலும் இப்படி அரசின் சலுகையை தவறான தகவல்களை கொடுத்து பெற்று கொள்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். அவர்களை யாரும் சலுகை திருடர்கள் என சொல்வதாக தெரியவில்லை. என் பள்ளி தோழன் ஒருவன் அரசின்படி தாழ்த்தப்பட்டவன். அவன் ஆசிரியராக வேலையில் சேரும்போதுதான் பிரச்சனை வந்தது. காரணம் அவன் பெயர் கிறிஸ்தவப் பெயர். எனவே அந்த பணி அவனுக்கு மறுக்கப்பட்டது. இந்து என்று சொல்லி வேலையை பெற்றுக்கொண்டான். இன்னுமொரு பள்ளி தோழன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னுடன் தேவாலயம் வந்தவன். இந்து என சொல்லித்தான் அரசின் பணியை அதிகாரி உமா சங்கர் போல பெற்றுக்கொண்டான்.

இது நமக்கு தவறு போல தெரிவதில்லை. இப்படி நம் எல்லோருக்குமே யாராவது தெரிந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்படி இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். எவ்வளவு நம் நாட்டிற்கு இழப்பு. எனவே சலுகையை தவறாக பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களையும், இங்கிலாந்தில் அழைப்பதைப் போல "சலுகை திருடர்கள்" என அழைக்கலாம்.

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!