.

Loading...

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வெள்ளைக்காரர்கள் திருடமாட்டார்களா என்ன?

வெள்ளைக்காரர்கள் திருடமாட்டார்களா என்ன?

நாம் சிறுவர்களாக இருக்கும் போது நமக்கெல்லாம் வெள்ளையாக இருப்பவர்கள் நல்லா படிப்பார்கள். பொய் சொல்ல மாட்டார்கள் என்று ஒரு தவறான எண்ணம் இருந்திருக்கும். அதைபோல சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவம் இது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்குள்ள பிரபல பல்பொருள் அங்காடியான Tesco-வில் பொருட்களை வாங்கிக்கொண்டு வெளி வாசலை கடக்கும் போது என்னோடு சேர்ந்தாற்போல ஒரு வெள்ளைக்காரியும் அதே நேரத்தில் அந்த வாசலை கடக்கவும் அங்கு வைக்கப்பட்டிருந்த EAS கருவி(பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் போனால் கண்டுபிடிக்கக்கூடியது)சப்தத்தை எழுப்பியது. நான் எல்லா பொருட்களுக்குமே பணம் செலுத்தியதால் அதை நான் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அக்கடையின் நிரந்தர வாடிக்கையாளரானதால் அங்குள்ள எல்லா பாதுகாப்பு பணியாளர்களையும் தெரியும், புதிதாக சேர்ந்திருந்த ஒரு இந்தியரை தவிர.

நான் சிறிது தூரம் வந்ததும் அந்த இந்திய காவலாளி என்பின்னாலே வந்து, அக்கருவி சப்தத்தை எழுப்பியதால் உங்களின் பொருட்களை பார்க்கவேண்டும் என்றார். நான் உடனே திரும்ப அந்த வாசலின் வழியே போய் வரவும், இப்போது அக்கருவி சப்தத்தை எழுப்பவில்லை. எனவே என்னிடம் தவறு இல்லையென கண்டதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சரி! அப்படியானால் அந்த கருவி ஏன் ஒலித்தது? நான் இல்லையென்றால் அந்த வெள்ளைகாரியாகத்தானே இருக்கவேண்டும். இப்போதுதான் அந்த இந்திய காவலாளிக்கு உறைத்தது. இதற்குள்ளாக வெள்ளைக்காரி போய்விட்டாள். ஒருசில வேளை அந்த வெள்ளைகாரியிடமும்கூட தவறில்லாமல் இருந்திருக்கலாம்.

இப்போது அந்த காவலாளி பெப்பேப்பே... என முழித்துக்கொண்டிருந்தார். நல்ல காவலாளி என்றால் இரண்டுபேரையும் நிற்க சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. என்னை மட்டும் நிற்க சொன்னார். காரணம், நான் முதலில் சொன்னதைபோல வெள்ளையா இருப்பவர்களை பற்றிய தவறான எண்ணமே! அப்படி இல்லை என்றால் தன்னைபோல இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் வெள்ளைக்காரர்கள் திருடுகிறார்களோ இல்லையோ! நம்ம ஆட்கள் திருந்தவேயில்லை!!

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!

2 கருத்துகள் :

Harikumar சொன்னது…

REALLY THINKABLE THINK............

Selvaraj சொன்னது…

*
Harikumar

REALLY THINKABLE THINK............

//உங்கள் கருத்திற்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!