.

Loading...

புதன், 22 ஜூலை, 2009

பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ?

பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ?



பதிவுலகம் இன்று அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரபல தமிழ் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுகிறது. அதேநேரத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்டாறு வெள்ளம்போல கரைபுரண்டோடுகிறது இந்த பதிவுலகம். கொஞ்சம் நாட்களுக்கு முன்புவரை ராஜா(அவிங்க) சொன்னதுபோல, இந்த பதிவுலகம் மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் போன்ற ரௌடிகளின் கட்டுபாட்டில் இருந்ததோ, அதைபோல சில பதிவர்களின் பிடியிலே இருந்தது. அதை இன்று புது முகங்கள் தகர்த்து விட்டனர். இருந்தாலும் பிடியை விட்டுக்கொடுத்து விடாமல இருக்க, விருதுகளை வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.

இன்று பல்கலைகழகங்களின் விருதே கேலிக்கூத்தாகி விட்டது.(கூத்தாடிகளுக்கு கொடுத்து) ஒரு காலத்தில் முனைவர் என்றால் எங்கோ ஒன்றோ இரண்டோ பேர் இருப்பார்கள். உண்மையிலே அவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் என்று அரசியல்வாதிகளுக்கும், திரைப்படத்துறையினருக்கும் பட்டம் கொடுத்தார்களோ! அன்றே அது கேலிக்கூத்தாகி விட்டது.



இப்போது இந்த நோய் பதிவுலகில் பரவி இருக்கிறது. இதை ஒரு ஆரோக்கியமான அமைப்பின் கீழ் கொண்டு வருவது மிகவும் அவசியம். குறைந்த பட்சம் இதை "தமிலிஷ்" "தமிழ்மணம்" மற்றும் இப்போது புதிதாக வந்திருக்கும் தமிழ் திரட்டிகள் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு பட்டாம் பூச்சி விருது, கரப்பான் பூச்சி விருது, வெண்டைக்காய் விருது, சுண்டைக்காய் விருது என கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வாங்குபவர்களும் "பத்மஸ்ரீ" பட்டம் கிடைத்ததைபோல பெருமைப்பட்டுக்கொண்டு, அவர்களுக்கு உடனே ஒரு நன்றி பதிவு வெளியிட்டு தாங்களும் அதற்கு தகுதியானவர்போல காட்டிக்கொள்கிறார்கள். ஏன்? இப்படி பூச்சி விருது கொடுப்பவர்கள், அதன் கூட பணமும் கொடுக்கவேண்டியதுதானே? ஏனெனில் கௌரவமான விருதுகளுடன் பணமும் வழங்கப்படுகிறது என்பதை ஏன் மறக்கிறீர்கள் அல்லது மறைக்கிறீர்கள்?

இதை படிக்கும்போது ஏற்கனவே விருதுகளை கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் என்னை திட்டலாம். ஆனால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! இதை அமைப்புக்கள், அதாவ்து தமிழ் திரட்டிகள் விருதுடன் பணமும் சேர்த்து கொடுக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். அதுவும் கண்டிப்பாக பணமும் சேர்த்து கொடுக்கவேண்டும்.




நிறைய தமிழ் எழுத்தாளர்களை, வலைப்பூவின் வழியே உருவாக்கிய பெருமை நிட்சயமாக "தமிலிஷ்"க்கு உண்டு. எனவே "தமிலிஷ்" இதற்கான முயற்சியில் இறங்குவது அவசியம். உங்கள் விளம்பர லாபத்தில் இதற்கு கொஞ்சம் பணம் ஒதுக்குவது அவசியம். தமிலிஷ் மட்டுமல்ல எல்லா தமிழ் திரட்டிகளுமே அதை செய்ய வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது. அல்ல என்றால் காளான்கள் போல கரப்பான் பூச்சிகளின் விருதுகள் பெருகிக்கொண்டே இருக்கும். இந்த விருது என்னும் விச கிருமி பெருகுவதை கட்டுப்படுத்த வேண்டியது தமிழ் திரட்டிகளின் கடமை.


இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் நீங்கள் வரவேண்டுமென விரும்பும் செல்வராஜ்

24 கருத்துகள் :

குழலி / Kuzhali சொன்னது…

//எனவே "தமிலிஷ்" இதற்கான முயற்சியில் இறங்குவது அவசியம். உங்கள் விளம்பர லாபத்தில் இதற்கு கொஞ்சம் பணம் ஒதுக்குவது அவசியம். தமிலிஷ் மட்டுமல்ல எல்லா தமிழ் திரட்டிகளுமே அதை செய்ய வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது.
//
தமிலிஷ், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, தமிலர்ஸ்,தமிழ்10 மற்றும் இன்ன பிற திரட்டிகளுக்கு கிடைக்கும் இலட்சக்கணக்கான விளம்பர வருவாயில் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்க வேண்டும்.... என்று இந்த பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறேன்

Selvaraj சொன்னது…

குழலி / Kuzhali said...

தமிலிஷ், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, தமிலர்ஸ்,தமிழ்10 மற்றும் இன்ன பிற திரட்டிகளுக்கு கிடைக்கும் இலட்சக்கணக்கான விளம்பர வருவாயில் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்க வேண்டும்.... என்று இந்த பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறேன்.

//உங்கள் கருத்திற்கு நன்றி! இன்னும் சிறிது நாளில் தமிழ் வலைப்பூக்கள் லட்சக்கணக்கில் வந்துவிடும். ஆகவே திரட்டிகள் பணத்துடன்கூடிய விருதையே கொடுக்கவேண்டும். சும்மா பதிவர்களை வைத்து பயன் மட்டும் அடைந்தால் போதாது.!!//

வால்பையன் சொன்னது…

அருமையான கருத்துகள்!

இவ்வளவு நாள் இந்த பிரபல பதிவர்களும், திரட்ட்டிகளும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறது!
உடனடியாக எதாவது செய்ய வேண்டும்!

அண்ணன் செல்வராஜ் தலைமையில் ஒன்று கூடுவோம்!

Selvaraj சொன்னது…

வால்பையன் said...
அருமையான கருத்துகள்!

இவ்வளவு நாள் இந்த பிரபல பதிவர்களும், திரட்ட்டிகளும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறது!
உடனடியாக எதாவது செய்ய வேண்டும்!

அண்ணன் செல்வராஜ் தலைமையில் ஒன்று கூடுவோம்!


//ஆமாங்க வால்பையன்! உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.

ஆனா "வாலுக்குதான் தலை அவசியம்."//

Unknown சொன்னது…

நண்பரே நீங்கள் கூறுவதற்கு முன்னரே தமிழ்10 தளம் விருதுகளுடன் பணத்தையும் சிறப்புப் பரிசாக அளிக்கிறது ...மேலும் குழலி அவர்களுக்கு எங்கள் தளத்தில் லட்சக்கணக்கில் எல்லாம் வருவாய் வருவதில்லை எங்கள் தளத்தில் நாங்கள் விளம்பரத்தை கூட இடவில்லை ஆனாலும் பதிவர்களை ஊக்குவிப்பதற்காக இச்சிறப்புப் பரிசை எம் சொந்தப் பணத்திலேயே அளிக்கிறோம் எனவே உங்கள் கருத்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள் ..
ஜூன் மாத சிறப்புப் பரிசு வென்ற சக்திவேல் அவர்களின் சுட்டியை பார்க்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post_30.html
தமிழ்10
சார்பாக
தமிழினி

Selvaraj சொன்னது…

தமிழினி said...
நண்பரே நீங்கள் கூறுவதற்கு முன்னரே தமிழ்10 தளம் விருதுகளுடன் பணத்தையும் சிறப்புப் பரிசாக அளிக்கிறது ...

//இது எனக்கும் தெரியும். தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள். நீங்கள் விளம்பரம் இதுவரை இடாமலே அப்பதிவரை பணம் மற்றும் விருது கொடுத்து கௌரவித்ததற்கு வாழ்த்துக்கள்!

அபி அப்பா சொன்னது…

அண்ணாச்சி! நான் உங்க தம்பி அபிஅப்பா! உங்க கருத்து என்னவோ நல்ல கருத்து தான். ஆனா சொன்ன விதம் தான் சரியில்லையோனு தோனுது.

கரப்பான் ப்பூச்சி விருது கொடுத்தவர் அண்ணாச்சி என்னும் ஆசீப். அவர் அந்த விருது கொடுக்கும் போது எழுதிய பதிவை பார்த்து அப்படியே நீங்களும் எழுதிவிட்டுஅவரையே கிண்டல் செய்வதாக நினைக்கிறேன்.

இங்கே இரவி மணி 1 ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக அந்த சுட்டியை காலை அனுப்பிவிடுகிறேன். அப்படியே அவர் கொடுத்தால் கூட (ஏதாவது நல்ல விருதாகவே) அவர் அதற்க்கு ஏற்புடையவர்.இடு பற்றி விலாவாரியாக என்னால் தனிமடலிடமுடியும் உங்களுக்கு. ஆனால் இந்த களத்தில் இல்லாத அவரை பற்றி இப்போஒது நான் பேச விரும்பவில்லை.

அடுத்து செந்தழல் ரவி! அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விருதை அறிவித்தார் தெரியுமா? எல்லாம் அடிச்சுகிட்டு ஓடிவிடும் சூழ்நிலையில் அதை அறிவித்தார். அவருக்கு என்ன தகுதி என நீங்க கேட்பது புரிகின்றது. இதே திரட்டிகள் சேய்யாத வேலையை அவர் அமைதீயாக செய்து கொண்டிருக்கின்றார். அவரால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கனினி துறையில் வேலை பெற்ற்றவர்கள் அதிகம். அப்படி அவரால் வேலை பெற்றவர்கள் கூட அடித்து கொண்டு நிற்பது யாரால் அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியும்??

"பசங்க"ன்னு ஒரு படம். பசங்க அடிச்சுப்பாங்க.ஒரு சின்ன பொண்ணு சொலி பார்ப்பா. வாத்தியார் கிட்ட சொல்லி பார்ப்பா. பின்ன்னவும் சண்டை நிற்காது. ஓடி போய் ஜனகனமன போடுவா! சண்டை நிற்கும்.

ரவி செய்ததுக்கும் இதுக்கும் எந்தவித வித்யாசமும் இல்லை. இப்போ என்ன ஒரு சந்தோஷம் பாருங்க எல்லார் முகத்திலும்.

தவிர இந்த வலைபதிவு ஆரம்ப கட்டத்தில் அவரின் உழைப்பு ஏழை பசங்க மேல்படிப்புக்கு அதனால் அவர் இழந்தது எத்தனை எல்லாம் சொல்லி இருப்பார் ஒரு பதிவிலே. அந்த சுட்டியும் தரேன்.

இதோ யாரும் செய்ய முடியாத அளவு ஏற்பாடுகளை கோவியார் என அழைக்கப்படும் கோவி. கண்ணன் மணற்கேணி மூலமாக செய்து வருகின்றார். உழைப்பு அத்த்னை.

இதே பை போத்தியகாரன் 20 பேருக்கு தலா 1500 வீதம் அப்படின்னு பிரமாதபடுத்தி அதற்கு வந்த புது பதிவர்கள் கதை மட்டுமே 150க்கு மேல் இருக்கு.

பாலபாரதி, லக்கி , பொன்ஸ் போன்றவர்கள் வலைப்பதிவர் பட்டரை நடத்தி அதனால் தான் இத்த்னை புது பதிவரும் வந்ததே.

நாமக்கல் சிபி போன்றவர்கள் வ.வா.ச என்ற அமைப்பின் மூலமாக எத்தனையோ போட்டிகள்ள் வைத்து ஏன் அவர் கொடுத்து அனுப்பி ராம் கொண்டு வந்து 500 மதிப்புள்ள புத்தகம் கொடுத்தார்கள்(22.07.2007)

ஒரு 7 பதிவர் சேர்ந்து நடத்தும் அந்த போட்டிகே 500 மதுப்புள்ள்ள புத்தகம். ஆனால் திரட்டிகள் கொடுபதோ அதே 500.

யார் யாரை விரட்ட நினைப்பது. நினைத்து பார்க்கவும்!

அன்பு தம்பி அபிஅப்பா

Selvaraj சொன்னது…

அபி அப்பா said...
அண்ணாச்சி! நான் உங்க தம்பி அபிஅப்பா! உங்க கருத்து என்னவோ நல்ல கருத்து தான். ஆனா சொன்ன விதம் தான் சரியில்லையோனு தோனுது.

//உங்களின் இந்த நீண்ட விளக்கத்திற்கு நன்றி! நான் இப்போதும் சொல்கிறேன் இந்தமாதிரி விருதுகளை திரட்டிகள் கொடுப்பதுதான் நன்றாக இருக்கும். மற்றபடி யாரையும் கிண்டல் செய்யும் நோக்கத்தில் சொல்லவில்லை//

Venkatesh சொன்னது…

தமிழினி,

குழலி யார் என்று உங்களுக்கு தெரியுமா?
//

செல்வராஜ் ஐயா! எப்படி திரட்டிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நானும் அதை பயன்படுத்திக்குவேன், பாருங்க இவ்வளவு நாள் இது தெரியாம கை காச போட்டு....

வெங்கடேஷ்

Selvaraj சொன்னது…

திரட்டி.காம் said...

செல்வராஜ் ஐயா! எப்படி திரட்டிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நானும் அதை பயன்படுத்திக்குவேன், பாருங்க இவ்வளவு நாள் இது தெரியாம கை காச போட்டு....

வெங்கடேஷ்

//திரட்டிகள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றன என நான் சொல்லவில்லை//

மணிகண்டன் சொன்னது…

பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்

நிகழ்காலத்தில்... சொன்னது…

மாதாவின் அதிசய காட்ச்சி

//காட்சி//சரி செய்யலாமே., முக்கியமான இடத்தில் தவறு நடப்பது சரியல்ல

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அண்ணா!
தங்கள் மனதில் பட்டதைப் போட்டு உடைத்துள்ளீர்கள். அது தான் பதிவர்களின் உரிமை.
பதிவுலகின் சிறப்பும் கூட
ஆனாலும் இந்த இருதரப்புச் சொல்லாடல்களால் நல்ல விருது ஒன்று பதிவுலகுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

Selvaraj சொன்னது…

மணிகண்டன் said...
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்

//மணிகண்டன், நீங்களும் அப்படித்தானா!!!//

Selvaraj சொன்னது…

நிகழ்காலத்தில்... said...
மாதாவின் அதிசய காட்ச்சி

//காட்சி//சரி செய்யலாமே., முக்கியமான இடத்தில் தவறு நடப்பது சரியல்ல

//தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!//

Selvaraj சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அண்ணா!
தங்கள் மனதில் பட்டதைப் போட்டு உடைத்துள்ளீர்கள். அது தான் பதிவர்களின் உரிமை.
பதிவுலகின் சிறப்பும் கூட
ஆனாலும் இந்த இருதரப்புச் சொல்லாடல்களால் நல்ல விருது ஒன்று பதிவுலகுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

//நன்றாக சொல்லியுள்ளீர்கள்! கண்டிப்பாக இதற்கு ஒரு தீர்வு வரும்//

//

அறிவிலி சொன்னது…

நீங்கதான் துணைவேந்தர்.

Selvaraj சொன்னது…

அறிவிலி said...
நீங்கதான் துணைவேந்தர்.

//நீங்க எப்ப ஆளுநர் ஆனீங்க? சொல்லவே இல்லீங்களே!//

கல்வெட்டு சொன்னது…

//தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican

பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
//

?????????

நன்மைகளை பல்கலைக்கழகங்கள்தான் செய்ய வேண்டுமா என்ன?

அதிகார மையங்கள்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.

உதாரணம்: நான் கத்தோலிக்கன் ஆவதற்கு வேண்டுமானால் போப்பில் ஆரம்பித்து உள்ளூர் மதபீடம்வரை அனுமதி தேவைப்படலாம். ஆனால் கிறித்துவின் நல்ல கொள்கைகளை பின்பற்றிவாழ எந்த அதிகாரபீடத்தின் அனுமதியும் தேவை இல்லை. சரியா?

யாரும் யாருக்கும் எதுவும் கொடுக்கலாம். அது கொடுப்பவர் மற்றும் பெருபவர் விருப்பங்களைச் சார்ந்தது.

யாரும் யாருக்கும் எதையும் கொடுக்கும் உரிமையை கேள்விகேட்கும் அதிகாரத்தை உங்களுக்கு எந்த பல்கலை வழங்கியது ?

நீங்களாகவே எடுத்துக்கொண்ட உரிமை அல்லது பதிவராக நீங்கள் கேள்விகேட்பது கடமை என்று நினைத்தீர்கள் சரியா? அதுபோலத்தான் விருதுகளும்.

பணம்தான் விருது அல்ல. நல்லதை நல்லது என்றும் சொல்வதும் விருதே!

Selvaraj சொன்னது…

கல்வெட்டு said...
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்கும் உரிமையை கேள்விகேட்கும் அதிகாரத்தை உங்களுக்கு எந்த பல்கலை வழங்கியது ?

நீங்களாகவே எடுத்துக்கொண்ட உரிமை அல்லது பதிவராக நீங்கள் கேள்விகேட்பது கடமை என்று நினைத்தீர்கள் சரியா? அதுபோலத்தான் விருதுகளும்.

//கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டிய வரிகள்//

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

அண்ணே!!! நமக்கு செலவில்லாமல் மற்றவர்களை மகிழ்விக்கக்கூடியது பாராட்டு மட்டுமே.. அப்படி இருக்க....

Selvaraj சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! said...
அண்ணே!!! நமக்கு செலவில்லாமல் மற்றவர்களை மகிழ்விக்கக்கூடியது பாராட்டு மட்டுமே.. அப்படி இருக்க....

//திரட்டிகள் விருது கொடுத்து பாராட்டுவது நல்லதே! நன்றி!!//

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அப்புடியே பட விமர்சனம் எழுதுபவர்களுக்கு வில்லு , ஏகன் விருது ஐடியா மணி தரப்போரரம்

Selvaraj சொன்னது…

krishna said...
அப்புடியே பட விமர்சனம் எழுதுபவர்களுக்கு வில்லு , ஏகன் விருது ஐடியா மணி தரப்போரரம்

//நீங்க ஏதாவது விருது கொடுக்கிறதா ஐடியா உண்டுங்களா?//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!