| இவர்களுக்கும் | 
![]()  | 
       இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட காயங்களை  குறிப்பதுதான் இது. இதை ஆங்கிலத்தில் stigmata என சொல்லுவார்கள். இரண்டு கைகளிலும்,  இரண்டு கால்களிலும், விலாவிலும் சிலுவை மரணத்தால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை.  இயேசு  கிறிஸ்து உயிர்தபின் தன் சீடர்களுக்கு முதல் முறையாக தோன்றியபோது (லூக்கா 24:  36-40,  யோவான் 20: 19-29) குழப்பத்தில் இருந்த தன் சீடர்களுக்கு இத்தழும்புகளை  காண்பித்தார் . இந்த தழும்புகளோடு கூடிய வேதனையை பல கத்தோலிக்க புனிதர்கள்  கொண்டிருந்தனர் . இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
       இவர்களில் மிதவும் பிரபலமானவர் புனித பிரான்சிஸ் அசிசி .
இவர் இயேசு கிறிஸ்துவை போலவே எல்லா  காயங்களையும் கொண்டிருந்தார் சில நாட்களில் தலையில் கூட முள் கிரீடத்தால்  ஏற்ப்பட்ட காயம் இவருக்கு ஏற்பட்டதுண்டு . சில நாட்களில் இரண்டு தோள்களிலும் கூட  காயங்கள் ஏற்பட்டதுண்டு . இது இயேசு சிலுவையை தோளில் சுமந்த அடையாளத்தை குறிக்கும்.  சிலருக்கு இந்த காயங்கள் வெளியில் தெரியாமல் அதே நேரம் அந்த வேதனையை அடைந்து  கொண்டிருக்கிறார்கள். சியன்னாவின் புனித கதேரின் இதேபோல காயங்களை 
பார்க்கும் படியாக கொண்டிருந்தார் . ஆனால்  அவை மறைந்து போகும் படியாத இயேசு கிறிஸ்துவிடம் செபிக்க அவை மறைந்து போயினவாம் .  ஆனால் அவர் அதன் வேதனையை அனுபவித்து வந்துள்ளார்
       புனித பிரான்சிஸ் அசிசிக்கு கைகளிலும் காலிலும் தழும்புகள் தலையுடன்கூடிய  ஆணிபோலவே இருந்துள்ளது. இவர் இதன் வேதனையை வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை  தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளார் . புனித பிரான்சிஸ் அசிசி இதை மறைக்கும் படியாத  கையுறைகள் அணிந்து வந்துள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த படறே பயோ இந்த  காயங்களை தொடர்ந்து கொண்டிருந்தார்.  
இவருடைய கை கால்களில் ரத்தம்  தொடர்ந்து கசிந்து கொண்டேதான் இருந்துள்ளது, இவரது விலாவில் இருந்து தினமும் ஒரு  கிண்ணம் அளவு ரத்தம் கசிந்துள்ளது.
      இந்த இயேசுவின் பாடுகளை  குறிக்கும் காயங்கள் 13 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியுள்ளது . இதுவரை 330  பேருக்கு இந்த இயேசுவின் சிலுவை மரணத்திற்கான பாடுகளின் தழும்புகள் தோன்றியுள்ளன,  அவர்களில் 62 பேர் புனிதர்கள், இதில் பெரும்பாலும் பெண்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. காரணம் இவர்கள் கடின நோன்பிருந்து  ஜெபிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும்,  இந்த சிலுவையின் பாடுகளின் தழும்புகளை கொண்டிருந்தவர்களில் பலர் மருத்துவ  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த அதிசய பாடுகளை உறிதிபடுத்தியுள்ளனர்.
      இந்த இயேசுவின் சிலுவை பாடுகளை கொண்டிருந்தவர்களின் பெயர்களில்  சிலவற்றை கீழ் காணலாம்.
நர்நியவின் லுசியா ப்ரோகாடெல்லி
அங்கேளிக்  கருகான
புனித கதேரின் (ரிச்சி)
புனித கதேரின் (சிஎன்ன)
அனா காதேரின்  எம்மேறிச்
புனித பிரான்சிஸ் அசிசி
புனித ஜெம்மா கல்கனி
புனித  வெரோனிக்கா கியுலியானி
புனித ஜான்
புனித பாஉச்டின கொவல்ச்க
புனித மரயே
தெரேசா நேஉமன்ன்
புனித படறே பயோ
புனித ரீட்டா
ழ்லட்கோ  சுடக்

