.

Loading...

Monday, 13 April 2009

இந்தி படித்தால் நன்மையே!

இந்தி படித்தால் நன்மையே!

இந்தி படித்தால் நன்மையே. சிறிது நாட்களுக்கு முன்பு இந்தி படிக்காதது தவறா? என ஒருவர் பதிவு வெளியிட்டிருந்தார். நிட்சயமாக தவறு கிடையாது. ஆனால் அதனால் பயன்கள் ஏராளம் என சொல்வேன்.

இந்தி தெரிந்தவன் என்பதாலும் இந்தி மட்டுமல்ல ஐந்து மொழிகளை பேசுபவன் என்பதாலும் அதனால் நான் நிறைய பயன்களை அடைந்தவன் என்பதாலும் இந்த பதிவை வெளியிடுகிறேன்.
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் ஆண்ட தமிழகத்தை என்று கல(ழ)கத்தார் கை பற்றினார்களோ அன்று தொடங்கியதுதான் இந்த இந்தி பிரச்சினை. தமிழனுக்கு கூடுதலாக ஒரு மொழி படிக்கக்கூடிய வாய்ப்பை பறித்த புண்ணியவான்கள் இந்த கழகத்தார்.


நான்கூட முழுக்க முழுக்க தமிழ் வழியாகவே படித்தவன். இருந்தாலும் தனியாக இந்தியில் "பிராத்மிக்" படித்திருந்ததால் கொஞ்சம் வாசிக்கவும் சில கேள்விகள் கேட்கவும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவும் மட்டுமே தெரிந்திருந்தேன். முதன் முதலாக அரபு நாட்டிற்கு சென்றபோதுதான் இந்தி தெரியாதது எவளவு தவறு என உணர்ந்தேன்.

காரணம் அரேபியர்கள் சரமாரியாக இந்தி பேசுபவர்களாகவும், நீ இந்தியன் உனக்கு இந்தி தெரியாதா? என கேட்கும்போதும் உண்மையிலே கேவலமாக கூட இருந்ததுண்டு. அதுமட்டுமல்ல அப்போது பக்ரைனில் உள்ள பேருந்துகளில் கூட பாதுகாப்பு குறித்த செய்திகள் அரபிக், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நம்மூரில் மட்டும் இந்தியை தார்பூசி அழிக்க செய்தார்கள்.


உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் தமிழக முதல்வரின் வாரிசுகளில் ஒருவர் இந்தி பண்டிட் என.
இந்த அரசியல் வாதிகளின் உபதேசம் எல்லாம் ஊருக்குதான். நம்மை அல்லது நம் பிள்ளைகளை இந்தி படிக்கவிடாமல் செய்து விட்டு அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரபிள்ளைகளை அமேரிக்கா, இங்கிலாந்து, இல்லேன்னா ஊட்டி, கொடைக்கானல் என எங்காவது விட்டு இந்தியையும் சேர்த்து படிக்க வைப்பார்கள்.


நகராட்சி பள்ளிகளில் படிக்கக்கூடிய குப்பனின் பிள்ளையும் சுப்பனின் பிள்ளையும் இந்தி படித்திடக்கூடாது.


தமிழகத்தின் எந்த ஒரு அரசியல் வாதியின் பிள்ளையோ அல்லது பேரப்பிள்ளையோ நகராட்சி பள்ளியில் படிப்பதை யாரேனும் அத்தாட்சியோடு நிருபிப்பீர்களா?

நல்லவேளை நான் வெளிநாட்டிற்கு வந்ததால் இந்தியை கற்றுககொள்ளும் வாய்ப்பை பெற்றேன் நான் மட்டுமல்ல இந்த பாக்கியம் அரபு நாடுகளில் இருக்கும் ஒவ்வெரு தமிழனுக்கும் கிடைத்திருக்கும் அதனால் எவ்வாறு பயன் அடைகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.குறைந்த பட்செம் பிற மாநிலத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமாவென! என் அனுபவத்தை வைத்து சொல்கிறேன் இந்தி ஒன்றும் தமிழ் போல பழமைவாய்ந்த புகழ்மிக்க மொழியல்ல இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தால் இந்தி படியுங்கள் இந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியாவது படித்திட வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். அவை நிட்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.

11 comments :

குப்பன்_யாஹூ said...

but Hindhi was useful 5 years back, Now English & Tamil are enough.

Writer Gnani has been writing for years that Minsiters, govt employees, IAS officers children must study in Govt schools only and to take medical treatment only in Govt hospitals.

malar said...

உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மையே ....நான் அமீரகத்தில் இன்னும் இதை அனுபவிக்கிறேன்

Selvaraj said...

வணக்கம் குப்பன், வணக்கம் மலர்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

raji said...

I object,Its not about Hindi, always learn other languages. If you are in Bangalore learn kannada, In leisure time learn malayalam. Its about learning other languages. but please don't say that learn hindi, say learn "other languages" as much as possible. Don't make hindi as big brother.

raji said...

If you learn hindi, it will be useful for rajasthan setu. so he can come and do business in chennai. don't be stupid, always good to learn other languages, now a days be good in Tamil (since it is your mother tongue), Engilsh (international language) additional to that learn kannada/telugu/malayalam ( since it is used in your neighbor state). but don't say that hindi

syed said...

உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மையே ....நான் saudi இன்னும் இதை அனுபவிக்கிறேன்

krishnaaleelai said...

தமிழ் நாட்டில் வடநாட்டவர்கள் எத்தனை நபர்கள் தொழில் செய்கிறார்கள் யாராவது இந்தி மட்டும் படித்தது எவ்வளவு மடத்தனம் என்று கூறியது உண்டா. நம்முடைய மொழியை வைத்து வேற்று மொழியை கற்றுக்கொண்டு வாழவேண்டும் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் கற்ப்பிக்க வேண்டும் என்றால் தெரிந்த மொழிகளின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகரிக்கலாமே தவிர அறிவு வளர்ச்சி கேள்விக்குறிதான்

A Sivakumar said...

Neengal ellam madu nunipul meivathai pola comment panrenga. Nobody from Dravadian Party asked to stop learning Hindi or proested against an individual reading Hindi or any language. They only opposed to make Hindi as a compulsory language in India when there are multiple languages.

பித்தன் said...

// நீ இந்தியன் உனக்கு இந்தி தெரியாதா? என கேட்கும்போதும் உண்மையிலே கேவலமாக கூட இருந்ததுண்டு//

இந்தியன்னுனா இந்தி கட்டாயமா தெரிஞ்சிருக்கணுமா ? இத எதுக்கு கேவலமா எடுத்துக்கணும் ?

//இந்த அரசியல் வாதிகளின் உபதேசம் எல்லாம் ஊருக்குதான். நம்மை அல்லது நம் பிள்ளைகளை இந்தி படிக்கவிடாமல் செய்து விட்டு அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரபிள்ளைகளை அமேரிக்கா, இங்கிலாந்து, இல்லேன்னா ஊட்டி, கொடைக்கானல் என எங்காவது விட்டு இந்தியையும் சேர்த்து படிக்க வைப்பார்கள்.//

எனக்கு தெரிஞ்சி எந்த அரசியல்வாதியும்,,, இந்தி படிகாதிங்கன்னு சொன்னது கிடையாது... இந்தி வேனும்கிரவன் இந்திய படிச்சிகிட்டு தான் இருக்காக...
என்னமோ இந்தி படிகுரவன நம்ம அரசியல்வாதிக தடுத்தமாதறி எழுதிருகிங்க...

இந்தி வேணும்ன்னா வடமாநிலங்களில் மற்றும் அரபு நாடுகளில் பயன்படலாம் ஆனா மற்றநாடுகளில் பயன்படாது....

மற்றபடி இந்தி படிச்சா சிலபேர் உலகத்தையே வாங்கிடலாம்ன்னு சொல்லுறது வாயில வந்தத உலருற பேச்சி ....

இந்தி படி இந்தி படி சொல்லுறத உட்டுட்டு...

எங்கு இருக்கோமோ அந்த மாநிலத்தின் அல்லது அந்த நாட்டின் மொழில கத்துகிட்டா நம்ம பொழப்பு இன்னும் நல்ல போகும்...

ஆங்கிலம் படிச்சா இன்னும் பல நாடுகளுக்கு போனாலும் பொலசிகலாம்...

ச்சின்னப் பையன் said...

உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மையே ....நான் delhi-யில் இதை அனுபவித்திருக்கிறேன்.

Selvaraj said...

வருகை தந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்தி படித்தால் அறிவு வளரும் என்றோ உலகை ஆளலாம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் இந்தி படித்தால் நன்மை என்றே சொல்லியுள்ளேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!